என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பணம் கையாடல்
நீங்கள் தேடியது "பணம் கையாடல்"
திருவாரூர் அருகே கையாடல் செய்த பணத்தை கட்ட முடியாததால் வங்கி கேசியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வைப்பூரை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (வயது 56). இவர் சோளங்கநல்லூரில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வங்கி பணம் ரூ.2½ லட்சத்தை கையாடல் செய்ததாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 19-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி வழங்கிவிட வேண்டும் என்று அதிகாரிகள் கெடு விதித்திருந்தனர். ஆனால் அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டார்.
அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அய்யா பிள்ளையின் மகன் தமிழன்பன் வைப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறையில் உள்ள ஒரு லாட்ஜில் 4 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கேசியர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஜோதிக்குமார் என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் லாட்ஜில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனது நிறுவனத்திற்கு தெரியாமல் அதிகமாக பில் போட்டு கொடுத்து குறைவாக கணக்கு காண்பித்து வந்துள்ளார். கடந்த வாரத்தில் இந்த சம்பவம் லாட்ஜின் மேனேஜருக்கு தெரியவந்தது.
அவர் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக ஜோதிக்குமாரிடம் விசாரித்ததில் அவர் ரூபாய் 4 லட்சம் வரை கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பேரில் பெருந்துறை போலீசில் மேனேஜர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×

X